விரைவில் விக்ரம், சமந்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

வியாழன், 17 ஜூலை 2014 (19:23 IST)
ஐ படம் எப்படி ஆற அமர தயாராகி வருகிறதோ அதற்கு நேர்மாறாக அதிவேகமாக தயாராகி வருகிறது விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கும் படம். முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என விஜய் மில்டன் தெரிவித்தார்.
இதுவொரு ரோடு மூவி. ஆக்ஷன் ரொமான்ஸ் காமெடி எல்லாம் கலந்தது. துருக்கியில் படத்தின் கிளைமாக்ஸை எடுக்கின்றனர். இதற்கு, இடம்மாறி இறங்கியவன் என்று பெயர் வைத்திருப்பதாக முதலில் கூறப்பட்டது. பிறகு பத்து எண்றதுக்குள்ள என்ற பெயரை தேர்வு செய்ததாக கூறினர். ஆனால் அதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலே இருந்தது.
 
இந்நிலையில் படத்தின் பெயர் பத்து எண்றதுக்குள்ள என்று விஜய் மில்டனே கூறினார். மேலும், விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
 
இந்தப் படத்தில் விக்ரம், சமந்தாவுடன் பசுபதி, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடிக்கின்றனர். டி.இமான் இசை. 2015 பொங்கலுக்கு படம் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்