சமீபத்தில் வெளியான படங்களில் சர்ப்ரைஸ் ஹிட் யாமிருக்க பயமே. கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி நடிப்பில் டி கே இயக்கியிருந்த இந்தப் படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் தயாரித்திருந்தது.
இன்றைய தேதிவரை படத்தை வெளியிட்ட எந்தத் திரையரங்கும் படத்தை தூக்கவில்லை. ரசிகர்கள் குடும்பமாக வந்து இந்த ஹாரர் படத்தைப் பார்த்து சிரித்துவிட்டு செல்கிறார்கள். விளம்பரம் எல்லாம் சேர்த்து ஐந்து கோடியில் தயாரான படம் எட்டு கோடிவரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திரையரங்கு வசூல். ஸீ தமிழ் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை 3 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுதவிர தெலுங்கு, இந்தி, கன்னட ரீமேக் உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள் இருக்கின்றன.