விரைவில் கிக் 2

செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (15:45 IST)
கிக் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என கிக் படத்தின் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி கூறினார்.
 
இப்படி மொட்டையாகச் சொன்னால் புரியாது. சின்ன பிளாஷ்பேக் போக வேண்டும்.
ரவி தேஜா நடிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கிய படம் கிக். ஷாம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கில் ஹிட்டாக தமிழில் ஜெயம் ராஜா தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து தில்லாலங்கடி என்ற பெயரில் ரீமேக் செய்தார். தமிழில் படம் சுமாராகவே போனது.
 
ஆனால் கிக் படத்தில் ஏதோ கிக் இருப்பதாக கருதிய சல்மான் தற்போது அப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்திப் படத்துக்கும் கிக் என்றே பெயர் வைத்துள்ளனர். சல்மான்கான் வரை சென்றிருக்கும் அந்த கிக் படத்தின் இரண்டாம் பாகத்தைதான் சுரேந்தர் ரெட்டி விரைவில் இயக்க உள்ளார்.
 
ரவி தேஜாவின் கமிட்மெண்ட்கள் முடிந்த உடன் கிக் 2 படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும், இப்போதைக்கு ரவி தேஜா, தயாரிப்பு நிறுவனம் இரண்டு மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்