விநாயகர் சதுர்த்தி அன்று அஜீத் படத்தின் பர்ஸ்ட் லுக்?

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (12:41 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. அதேநேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
முதல் ஷெட்யூல்டில் அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை கௌதம் படமாக்கினார். அதிகமும் இரவு வேளைகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் மீசையில்லாமல் இந்த ஷெட்யூல்டில் அஜீத் கலந்து கொண்டார்.
 
த்ரிஷாவுடனான காட்சிகள் அதன் பிறகு படமாக்கப்பட்டது. அதில் கறுப்பு தலைமுடி அடர்த்தியான மீசை என அஜீத்தின் கெட்டப் மாறியிருந்தது. 
 
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தாலும் படத்தின் பெயரை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார் கௌதம். ஆயிரம் தோட்டாக்கள், துப்பறியும் ஆனந்த் என மீடியாவில் கசியவிடப்பட்ட பெயர்கள் நன்றாக இருப்பதாக கூறிய கௌதம், ஆனால் இது படத்தின் பெயர் கிடையாது என்றார். அஜீத்தின் கதாபாத்திர பெயரான சத்யாவையே அவர் படத்தின் பெயராக வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஆகஸ்ட் 29 விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் படத்தின் பெயரை வெளியிட கௌதம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்