விஜய் வில்லன் சுதீப்...? சிம்புதேவன் பட சீக்ரெட்ஸ்

புதன், 16 ஏப்ரல் 2014 (17:30 IST)
கத்தி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து உறுதி செய்யப்படாத பல தகவல்கள்.
 
காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சுதீப்பை அணுகியுள்ளார் சிம்புதேவன். அவரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய் ஜோ‌டியாக ஸ்ருதி நடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஸ்ரீதேவியை நடிக்க வைக்கவும் விரும்புகிறார் சிம்புதேவன்.
 
படத்துக்கு இசை அனேகமாக ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்கலாம். ஏற்கனவே உதயா, அழகிய தமிழ்மகன் படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
கத்தி முடிந்த பிறகு செப்டம்பருக்கு மேல் சிம்புதேவன் படம் தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்