விஜய் - விக்ரம் பிரபு படம் தொடங்கியது, ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்

திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (17:18 IST)
சைவம் படத்துக்குப் பிறகு விஜய் இயக்கும் புதிய படம் இன்று கொச்சியில் தொடங்கியுள்ளது. இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார்.
 
அமலா பாலை திருமணம் செய்த பிறகு விஜய் இயக்கும் முதல் படம் இது. விக்ரம் பிரபு ஹீரோ. ஹீரோயினாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்று படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இன்னொரு ஹீரோயினாக பெங்களூர் டேய்ஸில் நடித்த காவ்யா ஷெட்டி நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளில் இவர் தோன்றுகிறார். இன்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வருகிறது.
 
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்