விஜய், முருகதாஸை கழற்றிவிட்ட லைக்கா?

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (12:00 IST)
கத்திப்பட பிரச்சனையை எப்படியும் முடிவுக்கு கொண்டு வருவது என்பதில் விஜய்யும், முருகதாஸும் முனைப்பாக இருந்தனர். படத்தயாரிப்பில் லைக்கா நிறுவனம் இடம்பெற்றிருப்பதுதானே பிரச்சனை, அதனை நீக்கிவிட்டால் எல்லாம் சுமூகமாகிவிடும் என்ற நினைப்பில் சில காய்களை நகர்த்தினர்.
லைக்கா இதுவரை செலவு செய்த பணத்தை செட்டில் செய்து, முருகதாஸ் தொடர்ந்து கூட்டணி அமைத்துவரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவை தயாரிப்பு நிறுவனமாக்குவதுதான் அவர்களின் திட்டம். ஆனால் அதனை முதல்கட்டத்திலேயே லைக்கா நிராகரித்ததாக தெரிகிறது. 
 
படத்தை தயாரித்தது நாங்கள். உங்களுக்கான சம்பளம் தரப்பட்டுவிட்டது. இனி படத்தை எப்படி வெளியிடுவது என்பது எங்களின் தலைவலி. நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று விஜய்யையும், முருகதாஸையும் லைக்கா விலக்கி விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
கத்தி படத்தின் போஸ்டர் லைக்கா நிறுவனத்தின் பெயர் இல்லாமல் வெளியாகும் என இரு தினங்கள் முன் கூறினர். ஆனால் லைக்கா பெயருடன்தான் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த மாற்றத்துக்குப் பின்னால் நடந்தது இதுதான் என்கிறார்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்