விஜய் சேதுபதியின் போவோமா கார் ஊர்கோலம் - படங்கள்

வியாழன், 30 ஜனவரி 2014 (12:00 IST)
விஜய் சேதுபதி நடித்திருக்கும் பண்ணையாரும் பத்மினியும் ஃபெப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. ஒரு பண்ணையாருக்கு அவரது பி‌ரிமியர் பத்மினி கார் மீதுள்ள கதால்தான் படத்தின் மையம். பண்ணையாராக ஜெயப்ரகாஷும், அவரது கார் டிரைவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
FILE

FILE

பி‌ரிமியர் பத்மினி கார் படத்தில் பிரதானமாக வருவதால் அந்த காருடன் அதே மாடல் பி‌ரியமியர் பத்மினி கார்கள் ஐம்பதையும் வைத்து இன்று ஓல்டு மகாபலிபுரம் சாலையில் ரேலிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் (ஆனால் பி‌ரிமியர் பத்மினிக்கு பதில் அதன் தயா‌ரிப்பு நிறுவனமான பியட்டின் புதிய மாடல் கார்களே அதிகம் அணிவகுத்திருந்தன) விஜய் சேதுபதி கொடி அசைத்து இந்த ரேலியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் விஜய் சேதுபதியுடன் படத்தின் இயக்குனர் அருண் குமார் மற்றும் படத்தின் தயா‌ரிப்பாளர் கலந்து கொண்டார்.
FILE

பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு சென்சார் யு சான்று தந்துள்ளது. விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். கௌரவ வேடத்தில் நடித்திருப்பவர் சினேகா.

மேலும் படங்கள்:

FILE


FILE


FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்