விஜய்யின் கத்தி படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது

செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (12:33 IST)
விஜய்யின் கத்தி படத்தின் தயாரிப்பில் பங்குபெற்றிருக்கும் லைகா நிறுவனம் ராஜபக்சேக்கு இணக்கமான நபர்களுடையது என்றும், அவர்களின் தொழில்கூட்டணி ஏற்கனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்திருக்கும் வேளையில் விஜய் லைகா தயாரிக்கும் கத்தியில் நடிப்பது பிரச்சனைகளை உருவாக்கலாம் எனவும் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் கூறியிருந்தது போல் கத்திக்கு எதிரான விமர்சனங்கள் நாள்தோறும் வலுத்து வருகிறது.
விஜய்யின் காவலன் படத்தில் ராஜபக்சேயின் விளம்பர தூதர் போல செயல்பட்ட அசின் நடித்ததை தமிழர்கள் பெரும்பாலனவர் விரும்பவில்லை. கடும் எதிர்ப்புகளுக்கிடையில் காவலன் படத்தில் அசின் நடிக்க வைக்கப்பட்டார். அப்போது காவலன் படத்தை புறக்கணிக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரினர்.
 
இன்று ராஜபக்சேக்கு அனைத்துவகையிலும் உதவி செய்யும் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்து வருகிறார். விஜய் அறியாமல் இந்த சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறாரா இல்லை மாட்ட வைக்கப்படுகிறாரா?
 
கத்தி படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வெளிநாடுவாழ் தமிழர்கள் பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர். இணையதளங்களில் கத்திக்கும், லைகாவுக்கும் எதிராக எழுதப்படுகின்றன. தமிழகத்திலும் இந்த எதிர்ப்பலை உருவாக சாத்தியமுள்ளது. 
 
விஜய்யும், முருகதாஸும் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?
 

வெப்துனியாவைப் படிக்கவும்