வாலு - புதிய தகவல்

திங்கள், 4 ஜூன் 2012 (10:09 IST)
போடா போடியும் வேட்டை மன்னனும் நிலுவையில் இருக்க வாலு படத்தின் வேலைகளில் கவனம் செலுத்துகிறார் சிம்பு. வேட்டை மன்னனை தயாரிக்கும் சிக் ஆர்ட்ஸ்தான் வாலுவையும் தயாரிக்கிறது.

வாலு படத்தில் சிம்பு ஜோடி ஹன்சிகா என்பது மட்டுமே தெரியும். படத்தை அறிமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார். இசை தமன்.

இந்தப் படம் ரயில்வே குடியிருப்பு பின்னணியில் நடக்கும் காதல் கதை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்புக்கு பெரம்பூர், அயனாவரம் பகுதிகளில் உள்ள ரயில்வே குவாட்டர்ஸில் லொகேஷன் தேடி வருகிறார்கள்.

வாலு படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் அதாவது 6 ஆம் தேதி முறைப்படி தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்