கத்தி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கும் ஃபேண்டஸி படத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிப்பதாக செய்தி. ஸ்ருதி தற்போது அந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.
ஸ்ருதிக்கு இந்தி, தெலுங்கு, தமிழ் அறிமுகங்கள் தோல்வியாக அமைந்தது. இந்தி, தெலுங்கில் தோல்வியிலிருந்து சட்டென்று மீண்டெழுந்தார். தெலுங்கில் தற்போது இவர்தான் அதிர்ஷ்ட நடிகை. இந்தியிலும் மோசமில்லை. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள வேடம் என்றால் ஸ்ருதியின் வீடு தேடி வருகின்றனர். ஆனால் தமிழ்...?