வஸந்தின் வா‌ரிசும் நடிக்க வருகிறார்

வியாழன், 21 மார்ச் 2013 (18:40 IST)
FILE
மூன்று பேர் மூன்று காதல் படத்தின் கடைசிப் பாடலை மட்டும் ஷூட் செய்யாமல் இருந்தார் வஸந்த். ஏதாவது அறிமுக நடிகரை அந்தப் பாடலில் ஆட வைக்கலாம் என்பது அவ‌ரின் திட்டம்.

மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் அறிமுக நடிகருக்கு ஒரு பாடலை தர தயாராக இருக்கிறாரே... என்னவொரு பரந்த உள்ளம் என யூனிட் சிலாகித்தது. கடைசியில் அவர் கொண்டு வந்து நிறுத்தியது அவ‌ரின் மகன் ‌ரித்விக் வருண்.

தனது படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்து ‌ரித்விக் வருணை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா ஆகியோ‌ரிடம் மகனை அறிமுகப்படுத்தி ஆசிர்வாதமும் வாங்கித் தந்திருக்கிறார்.

அறிமுக நடிகர்களை ஆயில் இல்லாமல் ஃபிரை செய்பவர் வஸந்த். ‌ரித்விக் எப்படி ஃப்ரை செய்ய உத்தேசித்திருக்கிறார் என்பது தெ‌ரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்