ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்குவது சமந்தாவின் பொழுதுப்போக்கு. இப்போது அவரது மூக்கு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. மூக்கை சற்று சீரமைத்தால் சமந்தாவின் அழகு கூடும் என் யாரோ சொல்லப் போக, சில மாதங்கள் முன்பு லண்டன் சென்று முதல்கட்ட அறுவை சிகிச்சையை முடித்தாராம். விரைவில் இரண்டாம்கட்ட அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லவிருக்கிறாராம். இந்த தகவல்களை வெளியிட்டு சமந்தாவின் மூக்கை சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது ஆந்திர மீடியா.