ர‌ஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து!

புதன், 7 ஜனவரி 2009 (21:39 IST)
டிசம்பர் 12 ர‌ஜினியின் பிறந்தநாள். ரசிகர்கள் சென்னையில் குவிவதை தவிர்க்க பிறந்தநாள் அன்று ஏதேனும் வெளியூர்களுக்கு சென்றுவிடுவது ர‌ஜினியின் வழக்கம். சமயத்தில் இது வெளிநாடாகவும் இருக்கும்.

ர‌ஜினி ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு இது ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. ஆனால் இந்தமுறை பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ர‌ஜினி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ர‌ஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பை தற்காலிகமாக கவனித்துவரும் சுதாகர் இதுபற்றி தெ‌ரிவித்ததாவது...

இலங்கையில் தமிழர்கள் துயரத்தை அனுபவித்து வருவது ர‌ஜினியை பாதித்துள்ளது. இதுபோன்ற துயரமான நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என தீர்மானித்துள்ளார் ர‌ஜினி. இது குறித்து அவரே அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அவ‌ரின் உணர்வை பு‌ரிந்து கொண்டு ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கமலும் இலங்கை தமிழர்களின் பொருட்டு தனது பிறந்தநாளை (நவ.7) கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்