மோகமுள், பாரதி, பெரியார் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஞான ராஜசேகரன் இந்திய கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்துள்ளார். ராமானுஜன் என்ற பெயரிலேயே இப்படம் தயாராகி உள்ளது.
பிரபலங்களின் வாழ்க்கையை படமாக்குவது ஞான ராஜசேகரனுக்கு இது முதல்முறை அல்ல. ஏற்கனவே பாரதி மற்றும் பெரியாரின் வாழ்க்கையை படமாக்கியுள்ளார். பாரதி படத்துக்கு நிறைய பாராட்டும் கொஞ்சமாக திட்டும், பெரியார் படத்துக்கு நிறைய திட்டும் கொஞ்சம் பாராட்டும் ஞான ராஜசேகரனுக்கு கிடைத்தது.