ராணியாக விரும்பும் சமந்தா

சனி, 29 மார்ச் 2014 (13:23 IST)
சூர்யா, விஜய் ஜோ‌டியாக அஞ்சான், கத்தி படங்களில் நடித்து வரும் சமந்தாவுக்கு ஹீரோயின் ஓரியண்ட் படத்தில் நடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. இந்தியில் வெளியான குயின்தான் அவரின் டார்கெட்.
கங்கனா ரனவத் நடிப்பில் இந்தியில் வெளியான குயின் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கங்கன ரனவத்தின் கதாபாத்திரம் அனைத்து நடிகைகளுக்குள்ளும் சின்னதாக பொறாமைத்தீயை விசிறியிருக்கிறது. அவ்வளவு அற்புதமான கதாபாத்திரம்.
 

குயின் திரைப்படத்தை தெலுங்கில் எடுக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். அப்படி குயின் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் நடிக்க சமந்தா தயாராக இருக்கிறார். தேவைப்பட்டால் ரீமேக்கை தயாரிக்கவும் அவர் தயாராம்.
இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் குயின் போன்று வெற்றி பெற்ற ககானி படத்தின் தெலுங்கு ரீமேக் அனாமிகாவில் நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்