ரஹ்மானின் நடைப் பயணம்

புதன், 3 செப்டம்பர் 2014 (11:56 IST)
முகஸ்துதி செய்வதில் தமிழ் சினிமாக்காரர்களை அடிக்க ஆளில்லை. சார்... நீங்க எங்கேயோ போய்டீங்க என்று முகத்துக்கு நேராகவே புகழும்போது பூரிப்படைகிறவர்களைவிட கூச்சத்தில் நெளிகிறவர்களே அதிகம். அதிலும் ரஹ்மான் போன்றவர்களைப் புகழும் போது அவரது முகபாவனையை பார்த்தாலே அவர் அதனை விரும்பவில்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில் இந்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டிளித்த ரஹ்மான் பின்வருமாறு கூறினார்.
 
வெளிநாடுகளில் இருக்கும் போதுதான் நான் சுதந்திரமாக உணர்கிறேன். வெளிநாடு சென்றால் பல இடங்களுக்கு நடந்தே செல்வேன். எந்தத் தொந்தரவும் இருக்காது. என்னை அவர்களுக்குத் தெரியாதது ஒரு காரணம். அப்படியே தெரிந்தாலும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிச் சென்று விடுவார்கள். இங்கே அதற்கான சாத்தியமில்லை என்று கூறினார்.
 
செலிபிரிடிகளை அவர்களே கூச்சப்படும் அளவுக்குப் புகழ்வதையும், தொந்தரவு செய்வதையும் இதைவிட நாசூக்காக சொல்ல முடியாது. இனியாவது நம்மூர் சினிமாக்காரர்களும் முக்கியமாக காம்பியர்களும் திருந்துவார்களா?
 

வெப்துனியாவைப் படிக்கவும்