தமிழ் சினிமாவுக்கு சமீபத்தில் கிடைத்த சைலண்ட் காமெடியர் கருணாகரன். உடம்பை அலட்டாமல், குரலை நெளிக்காமல், முகத்தை உணர்ச்சிகளால் புரட்டாமல் தனது அப்பாவி லுக்கை வைத்து ஸ்கோர் செய்வதில் கருணாகரன் கில்லாடி. சூதுகவ்வும் படத்தில் அப்பாவியாக அம்மாவிடம் வந்து, அம்மா நான் சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திடலாம்னு இருக்கேன் என்று சொல்வதாகட்டும். பிசினஸ் செய்ய அப்பா பணம் தரவில்லை என்றதும், அம்மா நான் சிகரெட் பிடிக்கலாம்னு இருக்கேன் என்பதாகட்டும். எப்போது நினைத்தாலும் புன்னகை கியாரண்டி.