என்னதான் மோஷன் கேப்சர் டெக்னாலஜி, அவதார், டின்டின் தொழில்நுட்பம் என்றாலும் உண்மை ரஜினியின் ரசிகர்கள் இந்த பொம்மை ரஜினியை ஏற்றுக் கொள்வார்களா என்ற பதற்றம் படம் எடுத்தவர்களுக்கு இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் ரஜினி நடிக்கயிருக்கும் படத்திலும் அனிமேஷன் ரஜினிதான் என்ற அதிர்ச்சி தகவல் கொஞ்ச நாளாக உலவுகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம் மே மாதம் ஆரம்பமாகிறது. ரஹ்மான் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இதுவொரு ஃபேன்டஸி படம், அனிமேஷன் ரஜினி அல்ல ரசிகர்கள் விரும்பும் நிஜ ரஜினியே இதில் நடிக்கிறார் என சோனாக்ஷி சின்கா மும்பையில் பேட்டியளித்துள்ளார்.