யுகே, யுஎஸ், ஆஸியில் துப்பாக்கி வசூல் நிலவரம்

வியாழன், 22 நவம்பர் 2012 (12:44 IST)
PR
தீபாவளி தினத்தில் துப்பாக்கி யுகே, யுஎஸ் ஸில் வெளியானது. விஜய், முருகதாஸ் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு கடல் கடந்தும் கன சூhராக இருந்ததை வசூல் தெரிவிக்கிறது.

யுகே யில் வார இறுதியில் அதாவது 16 ஆம் தேதி முதல் 18 வரை 1,34,280 பவுண்ட்களை துப்பாக்கி வசூலித்துள்ளது. 25 திரையிடல்களில் இதனை சாதித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் சுமார் 1.18 கோடிகள். சமீபத்தில் எந்த தமிழ் திரைப்படமும் இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. விஜய் படங்களிலும் இதுவே டாப்.

யுஎஸ் ஸில் வார இறுதி மூன்று தினங்களில் 36 திரையிடல்களில் 3,2,0349 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் 1.76 கோடி. யுஎஸ்ஸை பொறுத்தவரை துப்பாக்கிதான் இந்த வருடத்தின் டாப் கிராஸர். அட்டகாசமான வசூல்.

ஆச்சரியம் என்னவென்றால் துப்பாக்கி தெலுங்கு டப்பிங்கும் இங்கு வெளியாகியுள்ளது. ஒன்பது திரையிடல்களில் துப்பாக்கி தெலுங்கு டப்பிங் 15,373 டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் 8.46 லட்சங்கள். இது போடா போடியின் வசூலைவிட ஏழு மடங்கு அதிகம்.

ஆஸ்ட்ரேலியாவில் 13 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதிவரை ஆறு தினங்களில் 37.99 லட்சங்களை வசூலித்துள்ளது துப்பாக்கி. யுகே, யுஎஸ் போல இங்கும் துப்பாக்கிதான் இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம்.

இந்தியாவைப் போலவே வெளிநாடுகளிலும் துப்பாக்கி வசூலில் சக்கைப்போடு போடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்