மூன்று நாளில் 12 கோடிகள் வசூலித்த மான் கராத்தே

திங்கள், 7 ஏப்ரல் 2014 (12:56 IST)
சிவ கார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே வெளியான முதல் மூன்று தினங்களில் 12 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது.
மான் கராத்தே தமிழகத்தில் 345 திரையரங்குகளிலும், ஆந்திரா, கர்நாடகாவில் கணிசமான திரையரங்குகளிலும் வெளியானது. வட மாநிலங்களிலும் முப்பது திரையரங்குகளுக்கு மேல் மான் கராத்தேயை திரையிட்டன. வெளிநாடுகளில் 180 திரையரங்குகள்.
 
மான் கராத்தே வெளியாகும் முன்பே திரையரங்கு உரிமை, தொலைக்காட்சி மற்றும் வெளிநாடு உரிமையில் 42 கோடி சம்பாதித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மூன்று தினங்களில் தமிழகத்தில் மட்டும் 12 கோடிகள் வசூலித்துள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்குப் பிறகு சிவ கார்த்திகேயனின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அவரது படத்துக்கு எவ்வளவு பணம் தரவும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் தயார். மான் கராத்தே படம் சுமார் என்று விமர்சனம் வந்த பிறகும் லாபகரமாகவே தமிழகத்தில் ஓடுகிறது.
 
சிவ கார்த்திகேயனின் அடுத்தப் படம் டாணாவை, படப்பிடிப்பு தொடங்கிய உடனேயே ஐங்கரன் நிறுவனம் வாங்கியுள்ளதும் முக்கியமானது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்