முறைகேடாக பயன்படுத்தப்பட்ட டி.இமானின் இசை

புதன், 27 நவம்பர் 2013 (19:36 IST)
பழம் வாங்க வந்தவர்கள் கடையையும் சேர்த்து விலைபேசியமாதி‌ரி ஆகிவிட்டது கன்னட தயா‌ரிப்பாளர் செய்த முறைகேடு. படத்தின் ‌ரிமேக் ரைட்ஸை வாங்கியவர்கள் இலவசமாக டி.இமானின் இசையையும் எடுத்துக் கொண்டிருப்பதை அநியாயம் என்றில்லாமல் வேறு என்ன சொல்ல?
FILE

படத்தின் ‌ரிமேக் உ‌ரிமையை விற்க தயா‌ரிப்பாளருக்கு உ‌ரிமை உண்டு. அதேநேரம் தனது படத்தில் இடம்பெற்ற இசையை இசையமைப்பாள‌ரின் அனுமதியின்றி எடுத்துக் கொள்ளவோ, இன்னொருவருக்கு தாரைவார்க்கவோ உ‌ரிமையில்லை.

மனம் கொத்திப் பறவையின்...

கன்னட ‌ரிமேக் உ‌ரிமையை வாங்கியவர்கள் டி.இமானின் இசையையும், பாடல்களையும் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். நண்பர்கள் மூலமாகதான் இந்த மோசடி இமானுக்கு தெரிய வந்தது. முறைப்படி கேட்டிருந்தால் அவரே இசையை பயன்படுத்த ஒத்துக் கொண்டிருப்பார். இதுவோ சொல்லாமல் செய்த திருட்டுத்தனம்.
FILE

இங்கிதம் தெரிந்தவர் இமான். கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்காமல், தயா‌ரிப்பாள‌ரிடம் இது குறித்து பேசுவேன் என நேர்வழியில் தனது ஸ்டெப்பை எடுத்து வைத்திருக்கிறார். வழக்குப் போட்டால் இமானுக்கு நஷ்டஈடு தர வேண்டியிருக்கும் மோசடி செய்தவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்