முனி 3 யில் தம்பியை களமிறக்கும் ராகவா லாரன்ஸ்

ஞாயிறு, 4 மே 2014 (17:07 IST)
முனி 3 கங்காவில் பிஸியாக இருக்கிறார் லாரன்ஸ். தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த அவரை பிரபாஸை வைத்து இயக்கிய ரிபெல் படம் குப்புற தள்ளியது. அதிலிருந்து மீள அவர் நம்பியிருப்பது முனி 3 கங்கா படத்தைதான்.
 
தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தில் தாப்ஸி ஹீரோயின். படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர்கள் தவிர முனி சீரிஸின் ஸ்டார் நடிகை கோவை சரளாவும் இருக்கிறார். 
 
இந்தப் படம் ஏற்கனவே முடிந்திருக்க வேண்டும். லாரன்சுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போது புது உற்சாகத்துடன் படத்தின் கடைசி ஷெட்யூல்டை லாரன்ஸ் தொடங்கியுள்ளார்.
 
இந்தப் படத்தில் தனது தம்பி வினோவுடன் ஒரு பாடலுக்கு லாரன்ஸ் ஆடுகிறார். தம்பியை ஹீரோவாக்குகிற எண்ணமும் லாரன்சுக்கு இருக்கிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்