தனது படம் ஒன்றுக்கு, காட் ஒன்லி ஜட்ஜ் ஹிம் என்று டேக்லைன் வைத்தார் சிம்பு. நூறு சதம் உண்மை. சிம்பு நடிக்கும் படம் எப்போது தொடங்கும் எப்போது முடியும் என்பதில் கடவுளுக்கே கன்பியூஷன் ஏற்படும். அந்தளவுக்கு குளறுபடிகள்.
இது நம்ம ஆளு படத்தை தொடங்கிய போது வாலு படம் முக்கால்வாசி முடிந்திருந்தது. கௌதம் படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. வாலு படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இது நம்ம ஆளு படத்தில் சிம்பு கவனம் செலுத்தினார். படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் டி.ஆருக்காக தயாரிப்பதும் பாண்டிராஜே. பட்ஜெட் எட்டு கோடி என்கின்றன தகவல்கள்.
இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தை டீலில் விட்டு வாலு படத்துக்கு சென்றார் சிம்பு. எப்போது மீண்டும் தொடங்கும் என்பது தெரியாமலே இது நம்ம ஆளு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வாரக்கணக்கில் இந்த வேலைநிறுத்தம் நீள, படமே ட்ராப் என்று வதந்திகள் பரவ ஆரம்பித்தன.