மீண்டும் வடகறி இயக்குனர் படத்தில் ஜெய்

வியாழன், 31 ஜூலை 2014 (18:54 IST)
இன்றைய தேதியில் ஒரு படம் நாலு திரையரங்கில் மூன்று வாரங்களை தாக்குப் பிடித்தாலே அது வெற்றிப் படம்தான். அத்துடன் போட்ட காசும் திரும்பினால் சொல்லவே வேண்டியதில்லை. அந்தவகையில் சரவண ராஜனின் வடகறி படமும் வெற்றிப் படம்தான்.
வடகறிக்குப் பிறகு காதல் கதையொன்றை சரவண ராஜன் படமாக்குகிறார். தமிழ்நாடு - கேரளா எல்லையில் நடக்கிற காதல் கதையாம் இது. ரொட்டிக்கு நடுவில் சிக்கனை வைத்த மாதிரி இந்த எல்லை காம்பினேஷனே ஒரு கிக்கை ஏற்படுத்துகிறது.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். அவருடன் வடகறியில் நடித்த ஆர்ஜே பாலாஜியும் நடிக்க உள்ளார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.
 
படத்தின் ஸ்கிரிப்ட் ஏறக்குறைய முடிந்த நிலையில் அக்டோபரில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்