திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு தேவயானிக்கு மோகன்லால் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மலையாளத்தில் கிடைத்தது. அதேபோல் மீனாவுக்கும். சென்ற வருட இறுதியில் வெளியான த்ரிஷ்யத்தில் மோகன்லால் ஜோடியாக மீனா நடித்தார். படம் பம்பர்ஹிட். தமிழில் சின்ன வேடங்களில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் லட்சுமிராய் விரைவில் மம்முட்டி ஜோடியாக நடிக்க உள்ளார்.
ஏற்கனவே இவர் மம்முட்டியுடன் அண்ணன் தம்பி படத்தில் இணைந்து நடித்துள்ளார். மோகன்லால் ஜோடியாக பல படங்கள். மம்முட்டி, லட்சுமி ராய் இணையும் படத்துக்கு ராஜா தி ராஜா என்று பெயர் வைத்துள்ளனர். மம்முட்டி, பிருத்விராஜ் நடித்த போக்கிரி ராஜா வெற்றி பெற்றதால் இப்படியொரு பெயரை தேர்வு செய்துள்ளனர்.