மீண்டும் தள்ளிப்போன ஜெய் - நஸ்ரியாவின் நிஹ்கா

புதன், 14 மே 2014 (11:43 IST)
தமிழில் படம் தயாரிக்கும் பிரமாண்ட தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன். அவர் தயாரித்த படமே  தள்ளிப் போகிறது என்றால்...?
விஸ்வரூபம் 2, ஐ என தற்போது தமிழில் தயாராகிவரும் இரண்டு மெகா பட்ஜெட் படங்களை தயாரிப்பது ஆஸ்கர் ஃபிலிம்ஸ்தான். இதன் காரணமாக அவர்கள் தயாரித்த திருமணம் எனும் நிஹ்கா, பூலோகம் படங்களை வெளியிட முடியாமல் தவிக்கிறார்கள். மே 15 தேர்தல் முடிவுக்கு ஒருநாள் முன்பு திருமணம் எனும் நிஹ்காவை வெளியிடுவது என முடிவு செய்திருந்தனர். அதிகாரபூர்வமாக தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே 15 படம் வெளியாகப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
தேர்தல் முடிவு களேபரத்தில் படம் காணாமல் போய்விடும் என்பதால் வெளியீட்டு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்திருப்பதாக கூறுகிறார்கள். ஒரு வாரம் என்று சொன்னால் மே 23. அன்றுதான் கோச்சடையான் வெளியாகிறது. தேர்தல் முடிவைவிட கோச்சடையான மிகப்பெரிய சூறாவளி. நிஹ்கா எனும் சருகு அதில் நிற்குமா?
 
திருமணம் எனும் நிஹ்காவில் ஜெய், நஸ்ரியா நசீம் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் அனீஸ் படத்தை இயக்கியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்