மிஷ்கின் உதவியாள‌ரின் கள்ளப்படம்

செவ்வாய், 3 டிசம்பர் 2013 (17:05 IST)
கலப்படம் அல்ல கள்ளப்படம். இதுதான் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ஜெ.வடிவேல் இயக்கும் முதல் படத்தின் பெயர்.
FILE

முன்பெல்லாம் எதிர்மறையாக பெயர் வைப்பதில்லை. படத்தின் ‌ரிசல்டும் நெகடிவ்வாகப் போய்விடும் என்ற சென்டிமெண்ட் சிக்கல். ஆனால் இன்றைய இளைஞர்கள் இந்த சுமைகளிலிருந்து மீண்டிருக்கிறார்கள். மிஷ்கினிடம் இணை இயக்குனராக இருந்த ஜெ.வடிவேல் இயக்கும் படத்தின் பெயர் கள்ளப்படம்.

FILE
படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர்கள். சிஷ்யர்களின் படத்தின் தொடக்க விழாவுக்கு குருக்கள் இரண்டு பேரும் - மிஷ்கின், பி.சி.ஸ்ரீராம் - வந்திருந்தனர். இருவரும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அடுத்தப் படத்தில் இணைந்தாலும் இணைவார்கள் என்று தோன்றியது.

கள்ளப்படத்துக்கு மிஷ்கினின் இரு படங்களுக்கு இசையமைத்த கே இசையமைக்கிறார். ஸ்கி‌ரிப்ட்தான் முக்கியம் என்பதாலா தெரியவில்லை, நடிப்பவர்களை யார் என்றே அறிமுகப்படுத்தவில்லை இயக்குனர்.

தமிழ் சினிமா வேகமாக முன்னேறுகிறதோ?

வெப்துனியாவைப் படிக்கவும்