மகேஷ் பாபு ஜோடியாக தமன்னா முதல்முறை நடித்திருக்கும் படம், ஆகடு. ஸ்ரீனி வைட்லா இயக்கியுள்ள இப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் நடந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டார்.
தமிழில் தமன்னா சிவ கார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது தவிர வேறு படங்களில்லை. ஆகடுவின் வெற்றிதான் தமன்னாவை தெலுங்கில் பிஸியாக்க வேண்டும். அதனை மனதில் வைத்து கடுமையான டயட்டில் பாடியை ஷேப்பாக்கி, டூயட் பாடலில் கவர்ச்சியில் புயலடித்துள்ளார்.