மாஸ்டரான குத்தாட்ட நடிகை

வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (20:37 IST)
இனி அபிநயஸ்ரீ வெறும் குத்தாட்ட நடிகையில்லை. அவர் இப்போது மாஸ்டர். மார்கழி 16 படம் அவருக்கு மாஸ்டர் அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.

ஒரு காலத்தில் பெ‌ரிய திரையை கிடுகிடுக்க வைத்த அனுராதாவின் மகள்தான் அபிநயஸ்ரீ. மகளை கதாநாயகி ஆக்க வேண்டும் என்றுதான் அனுராதாவுக்கு ஆசை. ஆனால், காலம் அவரை ஆக்கியது என்னவோ குத்தாட்ட நடிகையாக.

அபிநயஸ்ரீக்கு இந்த ரொட்டீன் வேலை போரடித்திருக்க வேண்டும். மார்கழி 16 படத்தில் டான்ஸ் மாஸ்டராக தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். மார்கழி 16 என்பது ஆங்கில தேதியில் டிசம்பர் 31. அன்றைய தினம் நடக்கும் சில நிகழ்ச்சிகள்தான் மார்கழி 16 படத்தின் கதை.

படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஜெயந்த். பல படங்களில் நடித்திருக்கும் சீனியர் பானுசந்த‌ரின் ூனியர்தான் இந்த ஜெயந்த். படத்தை ‌ில்லுனு எடுங்கப்பா.

வெப்துனியாவைப் படிக்கவும்