மர்தானியை குழந்தைகள் பார்க்க வேண்டாம் - அமீர் கானின் அட்வைஸ்

வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (15:43 IST)
ராணி முகர்ஜி நடிப்பில் வெளிவந்துள்ள மர்தானி படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாம் என்று அமீர் கான் அறிவுரை வழங்கியுள்ளார்.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் சார்பில் ராணி முகர்ஜியின் கணவர் ஆதித்ய சோப்ரா தயாரித்துள்ள படம் மர்தானி. பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சிறுமிகளைப் பற்றிய இந்தப் படத்தில் ராணி முகர்ஜி கடத்தல் கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். படம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக படம் நெடுக வன்முறைக் காட்சிகளையும், கெட்ட வார்த்தைகளையும் இறைத்துள்ளனர். 
 
படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் மிக மோசமான பல காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது நினைவிருக்கலாம்.
 
இந்நிலையில் படத்தைப் பார்த்த அமீர் கான், கருத்து சுதந்திரத்தை மதிப்பவனாக இருந்தாலும், மர்தானியில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான வன்முறைகள், கெட்ட வார்த்தைகள் குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றவை இல்லை என கருத்து கூறியுள்ளார்.
 
படத்தின் கலெக்ஷன் பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கையில் அமீர் கானின் வேண்டுகோள் படத்தின் தோல்வியை உறுதிப்படுத்தும் என்கிறhர்கள் பாலிவுட்டில்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்