மம்முட்டி மகனின் படத்தை வெளியிடும் உதயநிதி

வியாழன், 10 ஏப்ரல் 2014 (12:33 IST)
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்திருக்கும் வாயை மூடி பேசவும் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் துல்கர் சல்மானின் முதல் தமிழ்ப் படம் வாயை மூடி பேசவும். காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகனின் இரண்டாவது படம். சென்ற வருடம் வெளியான நேரம் படத்தைப் போல இப்படமும் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரானது. மொத்தம் 52 தினங்களில் மொத்த படத்தையும் முடித்தார் பாலாஜி மோகன். தமிழ்ப் படமாக இருந்தாலும் ஹீரோ துல்கர் சல்மான், ஹீரோயின் நஸ்ரியா இருவருமே மலையாளிகள்.
 
ஏப்ரல் 25 வெளியாகும் இப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. தற்போது ஓடிக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலை படத்தையும் ரெட்ஜெயண்டே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்