மம்முட்டி அறிமுகப்படுத்திய மை ட்ரீ சேலஞ்ச்

திங்கள், 1 செப்டம்பர் 2014 (12:09 IST)
ஐஸ் பக்கெட் சவால் உலகம் முழுவதும் எபோலா வைரஸ் மாதிரி பரவி வருகிறது. பூனம் பாண்டே போன்றவர்கள் ஜட்டி பிராவுடன் தலையில் தண்ணி ஊற்றி அதையும் கவர்ச்சியாக்கி வருகிறார்கள். 
 
இந்நிலையில், தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டாம், மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றுங்கள் என்று வித்தியாசமான வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி.
உலகம் வெப்பமாதலை கட்டுப்படுத்தும் முயற்சியாக மரக்கன்று நடும் திட்டத்தை, மை ட்ரீ சேலஞ்ச் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார் மம்முட்டி. தனது வீட்டில் மரக்கன்று நட்டு அதனை வீடியோவில் இணையத்தில் ஏற்றியிருக்கும் அவர், தனது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு மரம் நடும்படி, மை ட்ரீ சேலஞ்ச் விடுத்துள்ளார். நடிகர் சூர்யா, ஷாருக்கான் போன்றவர்களுக்கும் அவர் சவால் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மம்முட்டியின் வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்களும் உற்சாகமாக மரக்கன்று நட்டு அதனை வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
 
மை ட்ரீ சேலஞ்ச் மற்றவர்களுக்காக அல்ல, நமக்காக, நம் அனைவருக்குமாக.
 

வெப்துனியாவைப் படிக்கவும்