பொழுதுபோக்கு: குத்து விளக்கு நாயகன் கொஞ்சம் முன்னாடியே வரலாம்

திங்கள், 23 செப்டம்பர் 2013 (11:23 IST)
அக்டோபர் 11 ஆம் தேதி நய்யாண்டி படம் வெளியாவதாக முதலில் கூறப்பட்டது. இப்போது அதில் மாற்றம் வரலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார், படத்தின் நாயகன் தனுஷ்.
FILE

களவாணி, வாகை சூட வா படங்களை இயக்கிய சற்குணத்தின் மூன்றாவது படைப்பு நய்யாண்டி. முதலில் சொட்டவாளக்குடி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். தனுஷ், நஸ்ரியா நசீம், சரண்யா, சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர். தனுஷ் குத்து விளக்கு செய்கிறவராக வருகிhர். நஸ்hpயா பல் மருத்துவம் படிக்கும் மாணவி . இவர்களுக்கிடையேயான காதலை காமெடி பின்னணியில் சொல்லியிருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 11 ஆம் தேதி...

FILE
வணக்கம் சென்னைக்கு போட்டியாக நய்யாண்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படம் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே வெளிவரலாம் என தனுஷ் தனது ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் நய்யாண்டியை தயாரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்