பொங்கல் படங்களின் யுகே, யுஎஸ் வசூல்

வெள்ளி, 18 ஜனவரி 2013 (11:34 IST)
FILE
பொங்கலுக்கு வெளியான அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்கள் யுகே, யுஎஸ்ஸில் வெளியாகி உள்ளன. இரண்டு படங்களும் மிகச்சுமாரான வசூலையே பெற்றுள்ளது வருந்தத்தக்கது.

யுகே யில் அலெக்ஸ் பாண்டியன் முதல்வார இறுதியில் பதினொரு திரையிடல்களில் 15,412 பவுண்ட்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் சமார் 13.63 லட்சங்கள். தரத்தை வைத்துப் பார்க்கையில் இந்த வசூலை போனஸ் என்றுதான் கருத வேண்டும்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா பெரிய ஸ்டார்கள் யாருமின்றி மூன்று திரையிடல்களில் 5,288 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. அதாவது 4.68 லட்சங்கள்.

யுஎஸ் ஸில் அப்படியே தலைகீழ். அலெக்ஸ் பாண்டியனை முந்திவிட்டது கண்ணா லட்டு தின்ன ஆசையா. இரண்டு நாள்களில் ஆறு திரையிடல்களில் 23,840 அமெரிக்கன் டாலர்களை சந்தானத்தின் படம் வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் 12.99 லட்சங்கள்.

அலெக்ஸ் பாண்டியனால் 12 திரையிடல்களில் - கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைவிட ஒரு மடங்கு அதிகம் - 9.02 லட்சங்களையே வசூலிக்க முடிந்திருக்கிறது.

உள்ளூரைப் போலவே வெளிநாட்டிலும் அலெக்ஸ் பாண்டியன் மண்ணை கவ்வியதை இந்த வசூல் காட்டுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்