பெண்களை ஊக்குவிக்கிறது.... மேரி கோம் படத்துக்கு வரிவிலக்கு

வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (11:36 IST)
மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறை அவரது பெயரிலேயே படமாக எடுத்துள்ளனர். மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார். படம் இந்தியாவில் முதல் மூன்று தினங்களில் 28 கோடி அளவுக்கு வசூலித்தது.
இந்தப் படம் விளையாட்டில் ஆர்வம் உள்ள பெண்களை ஊக்கப்படுத்துகிறது என்று கூறி படத்துக்கு வரி விலக்கு அளித்துள்ளது, ஆனந்தி பென் படேல் தலைமையிலான குஜராத் அரசு. 
 
ஆனந்தி பென் படேல் குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்