பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் லிங்கா - அம்பரீஷ், சுமலதா பங்கேற்பு

வெள்ளி, 2 மே 2014 (12:35 IST)
ரஜினி நடிக்கும் லிங்காவின் படப்பிடிப்பு மைசூரில் பூஜையுடன் தொடங்கியது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா நாயகிகள். 

கோச்சடையான் போல் அனிமேஷன் ரஜினி இல்லாமல் நிஜ ரஜினியே லிங்காவில் தோன்றுகிறார். மைசூரில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அதன் பிறகு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இரண்டாவதுகட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ரத்னவேல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
மைசூரில் நடைபெற்ற படப்பூஜையில் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருடன் நடிகர் அம்பரீஷும், அவரது மனைவி சுமலதாவும் கலந்து கொண்டனர்.

மேலும் படங்கள்:




வெப்துனியாவைப் படிக்கவும்