புளிப்பு இனிப்பாக மாறிய மதன மாமாவும் மடிசார் மாமியும்

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (12:06 IST)
மடிசார் மாமி என்ற பெயரை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் படத்தின் பெயரை புளிப்பு இனிப்பு என்று மாற்றியுள்ளனர். 

மிதுன் நாயகனாக நடித்திருக்கும் மடிசார் மாமி படத்துக்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு கிளம்பியது. பாடல்கள் வெளியீட்டு விழாவின்போதே படத்தின் பெயர் குறித்து விழாவில் பேசியவர்கள் சுட்டிக் காட்டினர். படம் சென்சாரான நிலையில் மடிசார் மாமி பெயரை பயன்படுத்த எதிர்ப்பு வலுத்ததுடன் வழக்கும் தொடரப்பட்டது.
மாடிசார் மாமி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை அவமானப்படுத்துகிறது என்பது படத்தை எதிர்ப்பவர்களின் புகார். 
மடிசார் மாமி என்பது எப்படி அவமானப்படுத்துவதாக அமையும்? 
 

அதற்கான முழுப்பொறுப்பும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரை சார்ந்ததே.
இந்தப் படத்துக்கு முதலில் வைத்த பெயர் மதன மாமாவும் மடிசார் மாமியும். பெயரை கேட்டாலே காலைக்காட்சி படம் என்ற சித்திரம்தான் முதலில் தோன்றும்.

அப்பட்டமாக முகத்தில் அடிப்பது போல் இருந்ததால் பலரின் எதிர்ப்புக்குப் பிறகு மதன மாமாவை எடிட் செய்து மடிசார் மாமி என்று மட்டும் வைத்தனர்.

 விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்ட ஸ்டில்கள் ஒவ்வொன்றிலும் காமம் சொட்டியது. இந்தப் புகைப்படங்கள் காரணமாகவே படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது, எதிர்பார்த்தது போல் பெயரும் மாறியது.
பெயரை மாற்றினாலும், படத்தின் ஸ்டில்களை பார்க்கும் போது படம் வெளிவந்த பிறகு மீண்டும் எதிர்ப்பு கிளம்பும் என்றுதான் தோன்றுகிறது. 






மேலும் படங்கள் ...







வெப்துனியாவைப் படிக்கவும்