புலிப்பார்வையும்... சீமானின் ரகசியப் பார்வையும்

வியாழன், 31 ஜூலை 2014 (16:55 IST)
ஈழம் சம்பந்தப்பட்ட எதையும் நேர்மையாக அணுக முடியாத சூழலே இங்குள்ளது. அப்படி எதையேனும் திரைப்படத்தில் காட்சியாக்கினால் சென்சாரை மீறி அது திரைக்கு வருவது கடினம். கடினம் என்ன... வரவே வராது.
 
இந்த நடைமுறையின் வெளிச்சத்தில், ஈழம் குறித்து படம் எடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று பலரும் கூறிவருவது ஏற்கக் கூடியதே. சீமானும் இதனை பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈழத்தை முதலீடாக கருதுகிறவர்கள் அதற்கு செவிமடுத்தால்தானே.
பிரவீண் காந்தின் புலிப்பார்வையும் எதையும் சாதிக்கப் போவதில்லை. பிரபாகரனின் மகனின் கடைசி நிமிடங்கள் தமிழர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை காசாக்கும் முயற்சியாகவே அது உள்ளது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபாகரனின் மகனைப் போலவே படத்தில் நடித்த சிறுவனையும் அலங்கரித்து மேடையில் அமர்த்தியிருந்தனர். இந்த நாடகங்கள்தான் சகிக்க முடியாதவை.
 
தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
இந்நிலையில் புலிப்பார்வையை சீமானுக்கு மட்டும் கடந்த 28ஆம் தேதி திரையிட்டு காட்டினார் பிரவீண் காந்த். வேறு யாரும் இந்த திரையிடலில் அனுமதிக்கப்படவில்லை. சில காட்சிகளை சீமான் நீக்கச் சொன்னதாக தகவல்.
 
படத்துக்கு சீமான் எதிர்ப்பு தெரிவிக்காதது பிரவீண் காந்தை தெம்பாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்