பீட்சா ரீமேக்கில் பார்வதி ஓமனக்குட்டன்

வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (13:32 IST)
பில்லா 2 வில் அஜீத்துடன் நடித்த பார்வதி ஓமனக்குட்டன் பீட்சா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார்.
Parvathy Omanakuttan
பில்லா 2 வுக்குப் பிறகு பார்வதி ஓமனக்குட்டனுக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. வடிவேலுவின் தெனாலிராமன் படத்துக்கு அவரைதான் முதலில் ஹீரோயினாக கேட்டனர். நடிக்க தயாராக இருந்தவர் சுற்றமும் நட்பும் சொன்ன அறிவுரையால் நடிக்க மறுத்தார். ஏறக்குறைய அவரது சினிமா கரியர் காலாவதியாக இருந்த நேரம் பீட்சா ரீமேக் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
 
பீட்சாவின் ரீமேக் உரிமையை பிஜோய் நம்பியார் முன்பே வாங்கியிருந்தார். அவர்தான் இந்தி ரீமேக்கை தயாரிப்பதாக கூறப்படுகிறது. அதில் எழுத்தாளராக பார்வதி ஓமனக்குட்டன் வருகிறார். தமிழில் வெற்றி பெற்ற படம் என்பதால் இந்தி ரீமேக் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்பது பார்வதி ஓமனக்குட்டனின் நம்பிக்கை.

வெப்துனியாவைப் படிக்கவும்