பிரேசிலில் இரண்டாம் உலகம்

திங்கள், 20 பிப்ரவரி 2012 (16:42 IST)
செல்வராகவன் இரண்டாம் உலகம் படத்துக்கான லொகேஷன் பார்த்து சென்னை திரும்பியிருக்கிறார். லொகேஷன் பார்க்க அவர் சென்ற இடம் பிரேசில், கால்பந்து கடவுளர்களின் தேசம்.

ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை பிவிபி சினிமாஸ் தயா‌ரிக்கிறது. இணை தயா‌ரிப்பு யு டிவி மோஷன் பிக்சர்ஸ். ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக கேமராமேனுடன் பிரேசில் சென்றிருந்தார் செல்வராகவன். பெப்சி ஸ்டிரைக் இதற்கு அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது.

ஸ்டிரைக் முடிந்ததும் ஆர்யா, அனுஷ்கா உள்ளிட்ட இரண்டாம் உலகம் டீம் பிரேசிலில் படப்பிடிப்பு நடத்த உள்ளது. பெரும்பாலான படங்களைப் போல் வெறும் பாடல் காட்சியை மட்டும் எடுப்பதற்காக பிரெசிலை செல்வராகவன் தேர்வு செய்யவில்லையாம். வசனக் காட்சிகளும் அங்கு எடுக்கப்பட உள்ளதாக தெ‌ரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்