சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்ணன் கூட்டணியின் மறக்க முடியாத படங்களுள் ஒன்றான மாமன் மகளை இயக்கிய பிரபல இயக்குனர் குருதனபால் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்தின் மூலம் இயக்குனரானவர் குருதனபால். நக்கல் நையாண்டியுடன் படம் எடுப்பதில் வல்லவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த தாய் மாமன் படம் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் சத்யராஜும், கவுண்டமணியும் அடிக்கும் கூத்து இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைப்பவை.