பிரசாந்த், நர்கிஸ் பக்ரி பாடல் காட்சி - மாத இறுதியில் படமாகிறது

புதன், 23 ஜூலை 2014 (16:58 IST)
சாகஸம் படத்துக்காக பிரசாந்துடன் இணைந்து நர்கீஸ் பக்ரி ஆடவிருக்கும் பாடல் காட்சி இந்த மாத இறுதியில் சென்னையில் பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் பிரசாந்த். இந்தமுறையும் அவரது தந்தை தியாகராஜனே படத்தை தயாரிக்க, அறிமுக இயக்குனர் அருண் ராஜ்வர்மா படத்தை இயக்கி வருகிறார். படத்துக்கு சாகஸம் என்று பெயர் வைத்துள்ளனர். சாகஸத்துக்காக உடல் எடையை பிரசாந்த் குறைத்துள்ளார். பழைய பிரசாந்தை இதில் நீங்கள் பார்க்கலாம் என தியாகராஜனும் உத்தரவாதம் தந்திருந்தார்.
 
சாகஸத்தில் பிரசாந்துடன் நடிக்கப் போகும் நடிகை யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஒரு பாடல் காட்சியில் இந்தி நடிகை நர்கிஸ் பக்ரி பிரசாந்துடன் ஆடுகிறார். குறிப்பிட்ட அந்தப் பாடல் காட்சி இந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் படமாக்கப்படுகிறது. தொடர்ந்து பத்து தினங்கள் மிகப்பிரமாண்டமாக இந்தப் பாடல் காட்சியை எடுக்க உள்ளனர்.
 
சாகஸத்துக்கு இசை தமன். குறிப்பிட்ட பாடலை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். பாண்டிய நாடு படத்தில் இவர் பாடிய ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடல் ஹிட்டானதால் அவரை பாட வைத்துள்ளனர். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்