பீட்சா படம் வெளியானதுமே அதன் ரீமேக் உரிமையை பிஜோய் நம்பியார் வாங்கினார். பீட்சா தெலுங்கில் டப் செய்யப்பட்டது. கன்னடம், பெங்கால் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த மாதம் 18-ம் தேதி இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பீட்சா என்ற பெயரிலேயே வெளியாகிறது.
3டி யில் படத்தை உருவாக்கியிருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் புதுவித அனுபவமாக இருக்கும். இந்தி பீட்சா பற்றி குறிப்பிட்ட பிஜோய் நம்பியார், தமிழிலிருந்து பல காட்சிகளை மாற்றியிருக்கிறோம். மேலும் 3டி யில் படம் வெளியாவதால் தமிழ் பீட்சா பார்த்தவர்களுக்கும் இந்தி பீட்சா புதுப்படமாக புது அனுபவமாக இருக்கும் என கூறியுள்ளார்.