பார்த்திபனை ஃபாலோ செய்யும் ராகவா லாரன்ஸ்

செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (18:30 IST)
பார்த்திபன் தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களை பயன்படுத்தியது போல் ராகவா லாரன்சும் தனது, முனி 3 - கங்கா படத்துக்கு ஐந்து இசையமைப்பாளர்களை பயன்படுத்துகிறார்.
கங்கா படத்துக்கு லாரன்ஸ் முதலில் ஒப்பந்தம் செய்தவர் அனிருத்.  பிஸி கமிட்மெண்ட் காரணமாக அனிருத் கங்காவிலிருந்து விலக, தமன் படத்துக்கு இசையமைப்பார் என்றனர். இந்நிலையில் தமனை பயன்படுத்தும் ஐடியாவையும் ஒதுக்கி வைத்தார் லாரன்ஸ்.
 
ஐந்து இசையமைப்பாளர்களை கங்காவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
கங்காவின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு இந்த வாரம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து 20 தினங்கள் சென்னையிலும், ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடக்கிறது. அதன்பின் இரு பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்கின்றனர். அத்துடன் படப்பிடிப்பு முடிந்துவிடும்.
 
டிசம்பரில் படம் திரைக்கு வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்