பாடல் காட்சிக்கு தயாராகும் மூன்று பேர் மூன்று காதல்

புதன், 2 ஜனவரி 2013 (12:03 IST)
FILE
வஸந்த் இயக்கி வரும் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே இனி எடுக்கப்பட உள்ளது. டாக்கி போர்ஷன் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் சென்னையில் வரும் பத்தாம் தேதி இந்தப் பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

மூன்று பேர் மூன்று காதலில் அர்ஜுன், சேரன், விமல் ஆகியோர் நடித்துள்ளனர். பானு தவிர்த்த மற்ற ஹீரோயின்கள் அனைவரும் புதுமுகங்கள். இசை யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

படத்தின் டாக்கி போர்ஷனையும், சில பாடல் காட்சிகளையும் முன்பே முடித்துவிட்ட வஸந்த் மீதமிருக்கும் ஒரு பாடலை வரும் பத்தாம் தேதி படமாக்குகிறார். ரிதம் படத்தில் சங்கர் மகாதேவனை ஆட வைத்த மாதிரி இதில் ஒரு பிரபலத்தை ஆட வைக்க நினைத்திருக்கிறாராம். யாரும் அகப்படவில்லையென்றால் தனது மகனையே அறிமுகப்படுத்த வஸந்த் திட்டமிட்டிருக்கிறார்.

பிப்ரவரியில் படம் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்