எட்டம் நூற்றாண்டு உத்தமன் என்ற நாடகக் கலைஞராகவும் 21 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மனோரஞ்சன் என்ற சினிமா நடிகராகவும் கமல் இரண்டு வேடங்களில் உத்தம வில்லனில் நடிக்கிறார். பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், ஜெயராம், ஊர்வசி, நாசர் இவர்களுடன் கே.பாலசந்தர். கே.விஸ்வநாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை கமல், வசனம் கிரேஸி மோகன்.