பாடகி சின்மயி மீது வன்கொடுமை புகார்

சனி, 27 அக்டோபர் 2012 (13:30 IST)
பாடகி சின்மயி தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது துவேஷத்துடன் பல விடயங்கள் எழுதியதாகவும். அதனால் அவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யும்படியும் சென்னை மாநகர கமிஷன‌ரிடம் புகார் தரப்பட்டுள்ளது. இந்தப் புகாரை புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறையின் தலைவர் நீலமேகம் தந்துள்ளார்.

சின்மயி தனது பிளாக்கிலும், ட்விட்ட‌ரிலும் பலவேறு சர்ச்சைக்கு‌ரிய கருத்துகளை தெ‌ரிவித்ததாக புகார் கிளம்பியுள்ளது. குறிப்பாக மீனவர்களையும், மீன் உண்பவர்களையும் அவர்களின் உணவுப்பழக்கத்தை முன்னிட்டு சின்மயி விமர்சித்ததாக கூறுகிறார்கள் (கூறுகிறார்கள், சொல்லப்படுகிறது என்பதற்கு மேல் எழுதினால் சின்மயி நம்மீது பாய்வதற்கு வாய்ப்புள்ளது. அவர் சொல்லுக்கு அதிகார தரப்பில் எக்ஸ்ட்ரா பவர் இருப்பதை சமீபமாக பார்த்து வருகிறோம். நமக்கெதுக்கு வம்பு?).

சாதி ‌ரிதியில் சின்மயி எழுதிவருவதாக நீலமேகம் புகார் தந்திருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், சாதிக்கு எதிராக அணி திரள்கிறவர்கள் என்று ஒரு வட்டம் சின்மயியின் கருத்துக்கு எதிராக தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. கைது செய்யப்படாவிடுலும் தனது அத்துமீறிய கருத்துகளை சின்மயி இனியாவது நிறுத்துவார் என்று நம்பலாம்.

விஷயம் எது, என்ன என்பது தெ‌ரியாமல் அவசரக்குடுக்கையாக சின்மயிக்கு ஆதரவு தெ‌ரிவித்த குஷ்பு, செல்வராகவனுக்கு நமது கண்டனங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்