நான்சென்ஸ்... அரவிந்த்சாமி கோபம்

சனி, 5 ஏப்ரல் 2014 (12:04 IST)
தமிழ் சினிமாவின் அழகான நாயகன் என்ற பெயருடன் நடித்துக் கொண்டிருந்த வேளையில், எனக்கு சினிமாவும் வேண்டாம் நடிப்பும் வேண்டாம் என்று ஒருநாள் காணாமல் போனார் அரவிந்த்சாமி. நடிகராக அவர் இருந்த இடத்தை அடைய தமிழ்நாட்டில் அப்போது குறைந்தது சில லட்சம் பேராவது ஆசைப்பட்டிருப்பார்கள். சிம்மாசனத்தை அடைவதைவிட அதனை உதறிக் கொண்டு எழுந்து போக நிறைய மனதைரியம் வேண்டும்.
அப்படிப்பட்ட அரவிந்த்சாமி அறிமுகப்படுத்திய மணிரத்னத்துக்காக கடல் படத்தில் திரும்பி வந்தார். நல்ல கேரக்டர் அமைந்தால் நடிப்பேன் என்றும் கூறினார். அதற்காக இப்படியா? கடலுக்குப் பிறகு எந்தவொரு படமும் கமிட்டாகாத அவரை அவ்வப்போது அவருக்கே தெரியாத படங்களுடன் கோர்த்துவிடுகிறார்கள். அஜீத், கௌதம் இணையும் படத்தில் அவர்தான் வில்லன் என்று எழுதினார்கள் (அந்த மந்தையில் நாமும் உண்டு மே...மே...) 
 
அதனை படித்துவிட்டு அரவிந்தசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நான்சென்ஸ் செய்திகளா போடுறாங்க என்று பாய்ந்துள்ளார். எதுவா இருந்தாலும் நானே ட்விட்டரில் போட்டுடறேனே என்றும் கூறியிருக்கிறார்.
 
ஓகே பாஸ்... இனிமே உங்க ட்விட்டரையே ஃபாலோ பண்றோம்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்