நவம்பர் 27 முதல் தொடங்கும் ரஜினி முருகன்

செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (16:49 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் அடுத்தும் சிவ கார்த்திகேயன் நடிக்கும் படத்தையே இயக்குகிறார். ரஜினி முருகன் என்று படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சிவ கார்த்திகேயன் ஜோடியாக தமன்னா நடிப்பார் என முதலில் கூறப்பட்டது. பிறகு லட்சுமி மேனன் என்றனர். தற்போது கீர்த்தி சுரேஷிடம் கால்ஷீட் கேட்டுள்ளதாக பொன்ராம் தெரிவித்தார். 
 
நவம்பர் 27 முதல் ரஜினி முருகனின் படப்பிடிப்பு தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் மதுரையில் படமாகின்றன. சில காட்சிகளை காரைக்குடியில் படமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்